கிரிமினல் க்ரஷ் பாடல் வரிகள்
Criminal Crush Song Lyrics From Tamil Newest Music Album Felony Crush. Starring CWC2 Fame Ashwin kumar and Tanya Ravichandran. The Song was composed by Godson Rudolph and Sung by Anirudh Ravichandar and Srinisha Jayaseelan.
பாடல் வரிகள்
ஆண் : ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரணும்
ஆண் : ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரணும்
ஆண் : எனக்கென யாருமில்லை
என்றே நானிருந்தேன்
ஓஹோ……..எந்தன் முன்னே
ஓஹோ……நீயே வந்தாய்
ஆண் : மழைக்கால ஊற்றைபோல
உள்ளே நீ எழுந்தாய்
ஓஹோ……எந்தன் முன்னே
ஓஹோ…..நீயே வந்தாய்
ஆண் : ஹோ என் காதல் நான் சொல்லி
இதயத்தை நான் தந்தேன் பெண்ணே
உன் உயிரில் என் உயிரை தைத்தாயே
ஆண் : இந்தநொடி ஒருபோதும் எந்தன் வாழ்வில்
மறவேன் பெண்ணே
உன்னோடு கைகோர்த்து வருவேனே…
ஆண் : ஆஹா தன்னந்தனியாக இருந்து வந்தேனே
வாழ்வின் துணையென நீயும் வந்தாய்
எந்தன் வாழ்க்கையும் வசந்த காலமே
வெள்ளை இரவிலே
ஆண் : ஆஹா உண்மைக் கவிதையே தங்க அருவியே
காதல் சுடரென நெஞ்சில் எழுந்தாய்
இன்னோர் பிறவியும் எனக்கு தேவையே
உன்னுடன் வாழவே……..
பெண் : என் முன்னே நீ வந்தாய்
சிலையாக நான் நின்றேன்
உன் பார்வை நொடிப்பொழுதில்
களவாடுதே……
பெண் : உன் காதல் நீ சொல்ல
எனை நான் மறந்தேன் அன்பே
உன்னோடு சேர்ந்திடவே துடித்தேனே……
பெண் : பனிசுடும் வேளையில் பெண்மை உருகுதே
இசை ஒன்று இசைத்திட இன்பம் பெருகுதே
மெல்லென உயிரினில் இன்பம் தூண்டுதே
தீயில் நனையுதே…..
பெண் : ஆஹா கன்னங்கள் ஓரமாய் கவிதை எழுதவா
மௌன மொழிகளில் காதல் பேசவா
கண்கள் மோதியே மின்னலின் அதிர்வொலி
என்னுள் பாயுதே….
ஆண் : ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரணும்
ஆண் : எனக்கென யாருமில்லை
என்றே நானிருந்தேன்
ஓஹோ……..எந்தன் முன்னே
ஓஹோ……நீயே வந்தாய்
ஆண் : மழைக்கால ஊற்றைபோல
உள்ளே நீ எழுந்தாய்
ஓஹோ……எந்தன் முன்னே
ஓஹோ…..நீயே வந்தாய்
0 Comments